/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போலி உத்தரவு வாயிலாக அரசு வேலை ரூ.19 லட்சம் மோசடி செய்த 7 பேர் மீது புகார்
/
போலி உத்தரவு வாயிலாக அரசு வேலை ரூ.19 லட்சம் மோசடி செய்த 7 பேர் மீது புகார்
போலி உத்தரவு வாயிலாக அரசு வேலை ரூ.19 லட்சம் மோசடி செய்த 7 பேர் மீது புகார்
போலி உத்தரவு வாயிலாக அரசு வேலை ரூ.19 லட்சம் மோசடி செய்த 7 பேர் மீது புகார்
ADDED : அக் 26, 2024 01:52 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு ராஜராஜேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் ேஹமாமாலினி, 24. இவரிடம் ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தாலுகா தாலிகான் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். மேலும் பணம் கொடுப்பவர்களுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து தாலிகான் கிராமத்தை சேர்ந்த சரத், அவரது மனைவி பிரியங்கா, உறவினர்கள் குணா, வெங்கடேசன், ராமானுஜம், அய்யப்பன் ஆகியோரை ராஜ்குமார், ேஹமாமாலினிக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இதில் குணா வேலுார் வேலைவாய்ப்பு அலுவகத்திலும், ராமானுஜம் சென்னை டி.எம்.எஸ்., அலுவகத்திலும், பிரியங்கா அரசு மருத்துவமனையில் நர்சாகவும், பணி செய்து வருவதாக சரத் அறிமுகம் செய்து வைத்தார்.
இதையடுத்து கடந்த 2022 நவ., 23ம் தேதி அன்று அரசு முத்திரையுடன் சுகாதாரதுறை அதிகாரி கையொப்பமிட்ட பணி நியமன ஆணையை, 2023 பிப்., 12ம் தேதி திருத்தணி அரசு மருத்துவமனை அருகே ேஹமாமாலினியை வரவழைத்து குணா, பிரியங்கா, ராமானுஜம் ஆகியோர் காண்பித்துள்ளனர். அந்த ஆணையில் மாதச்சம்பளம் 26, 800 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதற்கு 4 லட்சம் ரூபாயை சரத் என்பவருக்கு கூகுள் பே வாயிலாக ேஹமாமாலினி செலுத்தியுள்ளார்.
பின் பணி நியமன ஆணையை 2023 பிப்., 16ம் தேதி திருத்தணி அரசு பொதுமருத்துவமனை அதிகாரியிடம் காண்பித்த போது அது போலி என தெரிந்தது.
இதேபோல் அரக்கோணம் பரவத்துார் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் உட்பட பலரிடம்,
பல்வேறு இடங்களில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, அரக்கோணத்தை சேர்ந்த தயாநிதி மற்றும் ேஹமாமாலினியை ஏமாற்றிய மேற்கண்ட ஆறு பேர் 15 லட்சம் ரூபாய் பெற்று கொண்டு போலி அரசு உத்தரவும் போலி அடையாள அட்டையும் கொடுத்து ஏமாற்றியுள்ளனர்.
இதுகுறித்து நேற்று ேஹமாமாலினி, பிரகாஷ் ஆகியோர் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் ஏழு பேர் மீது புகார் அளித்துள்ளனர். புகார் குறித்து விசாரிக்கப்படுகிறது.