/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கமிஷன் தர மறுத்த ஒப்பந்ததாரருக்கு 'பளார்' தி.மு.க., ஒன்றிய செயலர் மீது புகார்

ADDED : ஜன 21, 2025 07:08 PM
பொன்னேரி:பொன்னேரி அடுத்த, கொடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார், 39; மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாராக உள்ளார்.
நேற்று முன்தினம், பணி தொடர்பாக, மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்றார். அப்போது, அங்கு வந்த, தி.மு.க., மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலர் ஜெகதீசன், என்பவர், சரவணகுமாரை அவதுாறாக பேசி உள்ளார். பின், முகத்தில் 'பளார்' என, அறைந்துவிட்டு, மிரட்டிவிட்டு சென்றார்.
இது குறித்து சரவணகுமார், மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்படி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சரவணகுமார், மீஞ்சூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட காணியம்பாக்கம் கிராமத்தில் சவுடு மண் குவாரி எடுத்தபோது, ஜெகதீசன் கேட்ட கமிஷன் தொகையை தராமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், கமிஷன் கிடைக்காத ஆத்திரத்தில் சரவணகுமார் தாக்குதல் நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக, மீஞ்சூர் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.