நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி மலைப்படிகளில்
மின்விளக்குகள் பொருத்தப்படுமா?
திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு பக்தர்கள் படிகள் வழியாக நடந்து செல்வதற்கு சரவணபொய்கை திருக்குளம் மற்றும் மேல்திருத்தணி நல்லாங்குளம் ஆகிய இரு வழியாக சென்று வருகின்றனர்.
இந்நிலையில், மேல்திருத்தணியில் இருந்து, மலைக்கோவிலுக்கு செல்லும் படிகளில் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால், மாலை 6:00 மணிக்கு மேல் படிகள் வழியாக செல்லும் பக்தர்கள் அச்சப்படுகின்றனர்.
மேலும், இரவு 8:45 மணிக்கு கோவில் நடையை சாத்தியபின் ஊழியர்களும் மலைப்படிகள் வழியாக மேல்திருத்தணிக்கு வருவதற்கும் அச்சப்படுகின்றனர்.
எனவே மலைப்படிகளில் மின்விளக்குகள் பொருத்த வேண்டும்.
- -கே.கமலக்கண்ணன், மேல்திருத்தணி.