/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புகார் பெட்டி: மின்கம்பம் சேதம் சீரமைக்க வேண்டும்
/
புகார் பெட்டி: மின்கம்பம் சேதம் சீரமைக்க வேண்டும்
ADDED : அக் 15, 2024 02:19 AM

மின்கம்பம் சேதம்
சீரமைக்க வேண்டும்
மீஞ்சூர் அடுத்த சீமாவரம் கிராமத்தில், ஜலகண்டீஸ்வரர் கோவில் அருகே உள்ள மின்கம்பம் ஒன்று சேதம் அடைந்து உள்ளது. கம்பத்தின் சிமென்ட் பூச்சுகள் கொட்டி உள்ளிருக்கும் கம்பிகள் துருப்பிடித்து கிடக்கின்றன.
பலத்த காற்று வீசினால் கம்பம் உடைந்து விழும் அபாய நிலை உள்ளது. குடியிருப்புகள் அருகில் இருப்பதால், அசம்பாவிதங்களுக்கும் வாய்ப்பு உள்ளது. சேதம் அடைந்து உள்ள மின்கம்பத்தை உடனடியாக மாற்றம் செய்ய மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
- ஆர்.ஜி.கிருஷ்ணா, மீஞ்சூர்.
தெருவிளக்கு எரிய
நடவடிக்கை தேவை
ஊத்துக்கோட்டை பேரூராட்சி அங்காளம்மன் கோவில் தெருவில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இச்சாலை வழியே அங்காளம்மன், சப்தகன்னியர் கோவிலுக்கு பக்தர்கள் செல்கின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இப்பகுதியில், தெரு விளக்குகள் எரியவில்லை. எனவே, பேரூராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அங்காளம்மன் கோவில் சாலையில் உள்ள தெரு விளக்குகளை சீரமைக்க வேண்டும்.
-- என்.ரமேஷ், ஊத்துக்கோட்டை.
தாசில்தார் அலுவலகத்திற்கு
ேஷர் ஆட்டோ இயக்கப்படுமா?
திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகம் காசிநாதபுரம் பகுதியில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு மக்கள் செல்ல வேண்டும் என்றால் சென்னை - திருப்பதி நெடுஞ்சாலை நாகலாபுரம் கூட்டுச்சாலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து இறங்கி மக்கள் ஒன்றரை கி.மீ., துாரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
முதியோர்கள் இவ்வளவு துாரம் நடந்து செல்வதற்கு கடும் சிரமப்படுகின்றனர். ேஷர் ஆட்டோக்கள் இல்லாததால், 100 முதல், 150 ரூபாய் வரை ஆட்டோவுக்கு கட்டணமாக கொடுத்து செல்ல வேண்டியுள்ளன.
எனவே, மக்கள் நலன் கருதி ேஷர் ஆட்டோக்கள் இயக்குவதற்கு போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- க.வினாயகம், திருத்தணி.
சேதமான ரேஷன் கட்டடம்
சீரமைக்கப்படுமா?
பூண்டி ஒன்றியம் குண்ணவலம் கிராமத்தில் ரேஷன் கடை அரசு பள்ளி அருகே அமைந்துள்ளது.30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ரேஷன் கட்டடம் தற்போது சேதமடைந்து உள்ளது.
இதனால் உணவு பொருட்கள் மழையில் நனையும் அபாயம் உள்ளதுடன், படிகள் உடைந்துள்ளதால் நுகர்வோர் விழுந்து காயமடைகின்றனர்.எனவே சேதமடைந்துள்ள ரேஷன் கட்டடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- க. விஜயகுமார், குண்ணவலம்.
புதருக்குள் மறைந்த
தகன மேடை
கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட அருண் நகர் அருகே சுடுகாடு உள்ளது.
சாமிரெட்டிகண்டிகை பகுதியில் உள்ள, 20க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதி மக்களுக்கு பொதுவான சுடுகாடாகும். முறையான பராமரிப்பின்றி சுடுகாட்டில் உள்ள தகன மேடையை மறைத்தபடி புதர்கள் சூழ்ந்துள்ளன. மேலும் சுடுகாட்டை சுற்றி கழிவுகள் குவிந்திருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் இறுதி சடங்கு செய்ய வருபவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். பெத்திக்குப்பம் ஊராட்சி நிர்வாகம் முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு சுடுகாட்டை துாய்மையாக வைத்திருக்க வேண்டும்.
- ஆர்.கமலநாதன், கும்மிடிப்பூண்டி.