ADDED : ஜன 02, 2024 07:04 AM

அ நிறம் | அளவு
பழுதடைந்த குடிநீர் தொட்டி
திருத்தணி அடுத்த பீரகுப்பம் பகுதியில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், பழுதடைந்த குடிநீர் தொட்டி உள்ளது.
இந்த தொட்டிக்கு கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் ஏற்றி வினியோகம் செய்யவதில்லை. இதற்கு பதிலாக ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்களின் மேல் புதிதாக தண்ணீர் தொட்டி வைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இதனால், சுகாதார வளாகத்தில் பயன்பாடு இல்லாத பழுதடைந்த தொட்டியால், எந்த நேரத்திலும் நோயாளிகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே, பழுதடைந்த குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும்.
- -எஸ்.குமார், பீரகுப்பம்.
