
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கழிப்பறை திறக்கப்படுமா?
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் ரயில் நிலைய முகப்பில், என்.எல்.சி., நிறுவனம் சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கழிப்பறைகள் நிறுவப்பட்டன. இதுவரை அந்த கழிப்பறைகள் திறக்கப்படவில்லை.
இதனால், ரயில் பயணியர் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். சிலர், திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பதால், ரயில் நிலைய வளாகம், சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. ரயில் பயணியரின் நலன் கருதி உடனடியாக அந்த கழிப்பறைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர்.கமலநாதன், கும்மிடிப்பூண்டி.