
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பயன்பாட்டில்லாத
புறக்காவல் நிலையம்
சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில், மாநில எல்லையோர சோதனைச்சாவடி உள்ளது. அங்கிருந்து பிரியும் ஏடூர் சாலை வழியாக மாற்று பாதையில் ஆந்திரா செல்ல வழி இருப்பதால் ஏடூர் சாலையை கண்காணிக்கும் நோக்கில், அந்த பிரிவில், புறக்காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டது. அதன் மூலம், மாற்று பாதையில், தமிழக - ஆந்திர மாநிலங்களுக்கு இடையே கடத்தல் சம்பவங்கள் தடுக்கப்பட்டன.
நான்கு ஆண்டுகள் முன் வரை பயன்பாட்டில் இருந்த புறக்காவல் நிலையம் தற்போது சிதிலமடைந்து கிடப்பில் போடப்பட்டு கிடக்கிறது. மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர, மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ். சதானந்தன், கும்மிடிப்பூண்டி.

