/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பயிர் காப்பீடு வழங்குவதில் தாமதம் நலன் காக்கும் கூட்டத்தில் புகார்
/
பயிர் காப்பீடு வழங்குவதில் தாமதம் நலன் காக்கும் கூட்டத்தில் புகார்
பயிர் காப்பீடு வழங்குவதில் தாமதம் நலன் காக்கும் கூட்டத்தில் புகார்
பயிர் காப்பீடு வழங்குவதில் தாமதம் நலன் காக்கும் கூட்டத்தில் புகார்
ADDED : செப் 28, 2024 07:17 PM
திருவள்ளூர்:திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில், நடந்தது.
கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:
பொன்னேரி பகுதியில் சேதமடைந்த பள்ளி கட்டடத்தை சீரமைத்து, வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பினை அகற்றி, பயிர் காப்பீட்டு வரும் தாமதத்தை சரிப்படுத்த வேண்டும். பூண்டி ஏரியை சுற்றி உள்ள மதகுகளை சீரமைக்க வேண்டும். கால்நடைகளால் பயிர் சேதம் அடைவதை தடுக்க வேண்டும்.
தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஏரி, குளங்களில் பனை விதைகள் நடவு செய்ய வேண்டும். சட்டவிரோதமாக விளை நிலங்களில் இயங்கும் செங்கல் சூளைகளை அகற்ற வேண்டும். வயல்வெளிகளில் உள்ள மின் ஒயர்களை சீரமைக்கவும், காட்டுப்பன்றிகள் தொல்லையை தடுக்கவும் வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
விவசாயிகளின் கோரிக்கைக்கு பதில் அளித்த கலெக்டர் கூறியதாவது:
கால்நடை வைத்திருப்போர் மற்றும் விவசாயிகள் சமுதாய உணர்வுடன் செயல்பட்டால் தீர்வு காண முடியும்.
இதுபோன்ற புகார்கள் குறித்து, 94443 17862 என்ற வாட்ஸாப் எண்ணிற்கும், 94989 01077 என்ற எண்ணிலும் புகார் அளிக்கலாம். விவசாயிகள் வழங்கும் கோரிக்கை மனு மீது காலம் தாழ்த்தாமல், அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, 18 விவசாயிகளுக்கு நீர்ப்பாசன மானிய தொகையாக, தலா 50,000 வீதம் 9 லட்சம் ரூபாய் காசோலையை கலெக்டர் வழங்கினார்.