/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீஞ்சூரில் நாய்களால் தொல்லை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார்
/
மீஞ்சூரில் நாய்களால் தொல்லை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார்
மீஞ்சூரில் நாய்களால் தொல்லை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார்
மீஞ்சூரில் நாய்களால் தொல்லை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார்
ADDED : ஜன 12, 2024 09:49 PM
மீஞ்சூர்:மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, 18 வார்டுகளிலும் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. கூட்டமாக சுற்றிவரும் இவை, சாலையில் செல்வோரை விரட்டிக் கடிக்கின்றன.
வாகனங்களில் செல்பவர்களை விரட்டி செல்வதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர். இரவு நேரங்களில் பணிமுடிந்து வீடு திரும்புவோர்களை துரத்துவதால், அவர்கள் அச்சத்திற்கு ஆளாகின்றனர்.
குழந்தைகள், பள்ளி மாணவர்கள் சாலைகளில் நடமாடுவதற்கே அச்சப்படுகின்றனர். இது தொடர்பாக, மீஞ்சூர் சுற்று வட்டார மக்கள் நலக்கூட்டணைப்பு சார்பில், நேற்று பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.
மனுவில், 'மீஞ்சூர் பஜார் வீதி, காந்தி சாலை, சூர்யா நகர், முரளி நகர், ரமணா நகர், அய்யப்பன் கோவில் தெரு ஆகிய இடங்களில் அதிகளவில் தெருநாய்கள் உள்ளன.
மீஞ்சூர் பகுதியில் பொதுமக்கள் தினமும் நாய் கடிக்கு ஆளாகி அவதிப்படுகின்றனர். அவற்றை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.