/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழில்நுட்ப பணிகளுக்கு நாளை கணினி வழி தேர்வு
/
தொழில்நுட்ப பணிகளுக்கு நாளை கணினி வழி தேர்வு
ADDED : செப் 06, 2025 02:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான கணினி வழி தேர்வு, நாளை துவங்குகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான கணினி வழி தேர்வு, நாளை மற்றும் 11, 18, 22, 27ம் தேதிகளில், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை ஆகிய வட்டங்களில் நடக்கிறது.
இதில், 2,579 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்விற்காக, மாநகர மற்றும் திருவள்ளூர் மண்டல நிர்வாகம் வாயிலாக போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.