ADDED : செப் 20, 2025 09:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் கணினி அறை பூட்டு உடைக்கப்பட்டது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில், கே.எல்.கே., அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் காலை பள்ளி திறந்தபோது, கணினி அறை பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. ஆனால், அங்கிருந்த பொருட்கள் திருடு போகவில்லை.
பள்ளியின் கணினி அறையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட முயன்றது குறித்து, கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து, வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.