தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ துருப்பிடித்து வீணாகும் பறிமுதல் வாகனங்கள்

 துருப்பிடித்து வீணாகும் பறிமுதல் வாகனங்கள்

 துருப்பிடித்து வீணாகும் பறிமுதல் வாகனங்கள்


ADDED : டிச 14, 2025 06:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 14, 2025 06:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெள்ளவேடு: வெள்ளவேடு காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், செடிகள் வளர்ந்து, துருப்பிடித்து வீணாகி வருகின்றன.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காவல் ஆணையரகம், பூந்தமல்லி சரகத்திற்கு உட்பட்டது வெள்ளவேடு காவல் நிலையம். அந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், குற்ற சம்பவம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள், காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

அந்த வளாகத்தில், பறிமுதல் செய்யப்படும் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு, போதிய இட வசதி இருந்தும், குப்பை போல் வெட்ட வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால், நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில், செடி, கொடிகள் படர்ந்தும், மழை, வெயிலால் துருப்பிடித்தும் வீணாகி வருகிறது. பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் வாகனங்களில் தங்கி வளரும் விதத்தில், வாகனங்களையும் பாழாக்கி வருகின்றனர். மேலும், காவல் நிலையம் அருகே உள்ள கோவிலுக்கு வந்து செல்லும், பக்தர்களுக்கும், புதராகியுள்ள வெள்ளவேடு காவல் நிலைய வளாகம் அச்சுறுத்தலாக மாறி வருகிறது.

எனவே, பறிமுதல் வாகனங்களை அவற்றின் உரிமையாளர்களிடம், ஏலம் மூலம் ஒப்படைக்க ஆவடி காவல் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும், சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us