/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்சார ரயிலில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்
/
மின்சார ரயிலில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்
ADDED : செப் 22, 2024 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொன்னேரி: சென்னை சென்ட்ரலில் இருந்து, கும்மிடிப்பூண்டி மார்க்கமாக ஆந்திர மாநிலம் நோக்கி சென்ற புறநகர் மின்சார ரயில்களில், தமிழக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது.
பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் ஜெய்க்கர் பிரபு தலைமையிலான குழுவினர் நேற்று மீஞ்சூர் - பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையே மேற்கண்ட ரயில்களில் சோதனை நடத்தினர்.
அதில், கேட்பாரற்று கிடந்த, 58 மூட்டைகளில், 1,413 கிலோ எடை உள்ள தமிழக ரேஷன் அரிசி இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து, பஞ்செட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.