/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்
/
கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்
ADDED : செப் 22, 2024 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை, நெல்லுார் வரை இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களில் அதிக அளவில் தமிழக ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது.
கும்மிடிப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி தலைமையிலான குழுவினர் கடந்த இரு தினங்களாக மேற்கண்ட ரயில்களில் சோதனை செய்தனர்.
அப்போது ரயில் பெட்டிகளில் கேட்பாரற்று கிடந்த, 82 மூட்டைகளில், 2 டன் எடை தமிழக ரேஷன் அரிசி இருந்தன. பறிமுதல் செய்த வட்ட வழங்கல் துறையினர், பஞ்செட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.