sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கிராம சபையில் தீர்மான புத்தகம் கைப்பற்றியதால் பரபரப்பு பல்வேறு ஊராட்சிகளில் கூட்டம் புறக்கணிப்பு

/

கிராம சபையில் தீர்மான புத்தகம் கைப்பற்றியதால் பரபரப்பு பல்வேறு ஊராட்சிகளில் கூட்டம் புறக்கணிப்பு

கிராம சபையில் தீர்மான புத்தகம் கைப்பற்றியதால் பரபரப்பு பல்வேறு ஊராட்சிகளில் கூட்டம் புறக்கணிப்பு

கிராம சபையில் தீர்மான புத்தகம் கைப்பற்றியதால் பரபரப்பு பல்வேறு ஊராட்சிகளில் கூட்டம் புறக்கணிப்பு


ADDED : அக் 11, 2025 09:56 PM

Google News

ADDED : அக் 11, 2025 09:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில் உள்ள, 526 ஊராட்சிகளில் நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

க டந்த அக்., 2 காந்தி ஜெயந்தியன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம், நேற்று நடந்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளில், நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது.

திருவள்ளூர், கடம்பத்துார் உள்ளிட்ட ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளில், சிறப்பு ஏற்பாடாக, நேரலையில் முதல்வர் ஸ்டாலின் உரையாடலை காணும் வகையில், 'டிவி' வைக்கப்பட்டு கூட்டம் நடந்தது.

தெருக்களில் உள்ள ஜாதி பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சோழவரம் ஒன்றியம், அத்திப்பேடு ஊராட்சியில், காட்டுப்பள்ளி - மாமல்லபுரம் இடையே அமையும், புதிய சாலை திட்ட பணிகளுக்காக, இடித்து அகற்றப்பட்ட அரசு கட்டடங்களுக்கு மாற்றாக, புதிய கட்டடங்கள் அமைக்காததை கண்டித்து, கிராம சபை கூட்டத்தை மக்கள் புறக்கணித்தனர்.

காரனோடையில் இடையூறாக உள்ள 'டாஸ்மாக்' கடையை அகற்ற, மூன்று முறை கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றியும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருமலைராஜிபேட்டை ஊராட்சியில், ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செயல்படுத்தப்படவில்லை. தற்போது மீண்டும் தீர்மானங்களை எழுதி வைப்பதில் பயனில்லை எனக்கூறி, தீர்மான புத்தகத்தை வாலிபர்கள் கைப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கச்சூர் ஊராட்சியில் கு டிநீர் வசதி கேட்டும், நந்திமங்களம் ஊராட்சியில் தெருவிளக்கு, சாலை வசதி கேட்டும் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர் .

எலரியம்பாளையம் ஊராட்சியில் குடிநீர், சாலை வசதிகள் செய்து கொடுக்காததை கண்டித்து, கிராம மக்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.

புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பதால், அனைத்து தெருக்களிலும் 'சிசிடிவி' பொருத்த வேண்டும். தொல்லை தரும் குரங்குகளை பிடிக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.

சிறுபுழல்பேட்டை ஊராட்சியில், தொழிற்சாலைகளால் ஏற்படும் காற்று மாசுவை கட்டுப்படுத்த வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவாலங்காடு, பழையனுார், நல்லாட்டூர் களாம்பாக்கம், சின்னம்மாபேட்டை, மணவூர், எல்.வி.புரம் ஆகிய ஊராட்சிகளில் சாலை, குடிநீர், மின்விளக்கு மற்றும் கழிவுநீர் கால்வாய்களை துார்வார வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

திருத்தணி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் நடந்த கூட்டத்தில், தெருக்களில் உள்ள ஜாதி பெயர்களை நீக்குதல், வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், கோவளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் சோபனா தங்கம் தலைமையில், நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது.

இதில், முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் பேசினார்.

அவர் பேசுகையில், 'அரசின் விடியல் பயணம் திட்டம் பயனுள்ளதாக உள்ளதா, பேருந்து வருகிறதா என தலைவரிடம் கேட்டார்.

அதற்கு தலைவர் பதிலளிக்கையில், எங்கள் ஊராட்சியில் 3,000 பெண்கள் பயனடைகின்றனர். இதன் மூலம், மாதம் 2,500 ரூபாய் சேமிக்கப்படுகிறது.

இதுமட்டும் இல்லாமல், மகளிர் உரிமைத்தொகை மாதம் 1,000 ரூபாய் என, 3,500 ரூபாய் சேமிப்பதாக கூறினார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள, 359 ஊராட்சிகளிலும் முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சில் கலந்துரையாடினார்.

காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு கலெக்டர் சினேகா, செங்கல் பட்டு எம்.எல்.ஏ‍., வரலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேடந்தாங்கல் ஊராட்சியில், நடந்த கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர் வேதாசலம் தலைமை வகித்தார்.

இதில், சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டதற்காக கடந்த ஆக., 15ல் டில்லியில் மத்திய அரசு வழங்கிய விருதை கிராம மக்களிடம் சமர்ப்பித்து, கிரா ம மக்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பவுஞ்சூர் அடுத்த நெல்வாய்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று காலை 11:00 மணிக்கு நடந்தது.

இதில் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 5 மாதங்களாக புதிய கல்குவாரி துவங்கப்பட்டு செயல்படுகிறது.

இதனால் நிலத்தடி நீர் பாதிப்படைந்து விவசாயம் மற்றும் கால்நடைகள் பெரிதும் பாதிக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் கல்குவாரிக்கு தினசரி வந்து செல்லும் லாரிகளால் விபத்து ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகையால் புதிதாக துவங்கப்பட்டுள்ள கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தினர்.

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்டத்தில், 274 ஊராட்சிகளில், சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது.

குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஜமீலா தலைமையில் நேற்று நடந்தது.

இதில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன், ஸ்ரீபெரும்புதுார் தி.மு.க., - எம்.பி., பாலு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கிராம சபை கூட்டத் தில் பங்கேற்றனர்.

இதில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், துாய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மனோகரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கம்பராஜபுரம் கிராமத்தில், சமுதாய கூடம்; ஆரிய பெரும்பாக்கம், முத்துவேடு, மேட்டுப்பாளையம் ஆகிய கிராமங்களில் கான்கிரீட் சாலைகள்; திம்மசமுத்திரத்தில் காரிய மேடை, திருவள்ளுவர் நகரில் கிளை நுாலகம்வேண்டும்.

வா லாஜாபாத் அவளூர் கல் குவாரி நிறுத்த வேண்டும், கம்பராஜபுரத்தில் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், பழையசீவரத்தில் ரயில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். அங்கம்பாக்கத்தில், பட்டாதாரர்களுக்கு வீட்டு வரி ரசீது வழங்கப்படும். இளையனார்வேலுார், வள்ளிமேடு மயானத்திற்கு பாதை ஏற்படுத்த வேண்டும்.

உத்திரமேரூர் மானாம்பதியில்,வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்; கூட்டு சாலையில் நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும். களியாம்பூண்டி கிராமத்தில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த வேண்டும் என்பதை உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

- நமது நிருபர் குழு -






      Dinamalar
      Follow us