/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூண்டி ஒன்றியத்தில் குழப்பம் ஒரு கிராமம், இரண்டு ஊராட்சி
/
பூண்டி ஒன்றியத்தில் குழப்பம் ஒரு கிராமம், இரண்டு ஊராட்சி
பூண்டி ஒன்றியத்தில் குழப்பம் ஒரு கிராமம், இரண்டு ஊராட்சி
பூண்டி ஒன்றியத்தில் குழப்பம் ஒரு கிராமம், இரண்டு ஊராட்சி
ADDED : பிப் 03, 2024 11:17 PM
திருவாலங்காடு: திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது மேட்டுப்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில், கொள்ளாபுரி அம்மன் கோவில் தெரு, விநாயகர் கோவில் தெரு என, இரண்டு தெருக்கள் உள்ளன. இங்கு 250க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்திற்கு உட்பட்ட கொள்ளாபுரி அம்மன் கோவில் தெரு சென்றாயன்பாளையம் ஊராட்சியிலும், விநாயகர் கோவில் தெரு தோமூர் ஊராட்சியிலும் வருகிறது.
ஒரே கிராமம் அதுவும் பக்கத்து தெரு இருவேறு ஊராட்சியில் வருவதால் அப்பகுதியினர் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் கிராம மக்கள் கூறியதாவது:
ரேஷன், ஆதார், வாக்காளர் அட்டையில் ஒரே கிராமம் இரண்டு ஊராட்சியில் வருவதால் வருவாய் துறையில் சான்றிதழ் பெறுவதில் சிரமம் உள்ளது.
அதேபோன்று கிராமத்தில் பிரச்னை என காவல் நிலையத்தை தொடர்பு கொண்டால் கனகம்மாசத்திரம், பென்னாலுார்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் எங்கள் எல்லையில் வரவில்லை என கூறுகின்றனர்.
இதனால் புகாரை எங்கு அளிப்பது என தெரியாமல் குழம்புகிறோம். பஞ்சாயத்து அலுவலகம், ஓட்டு சாவடி மையம் உள்ளிட்டவை மாறுபடுகின்றன.
இதனால் கிராமத்திற்கு தேவையான வசதிகளை பெறுவதில் சிக்கல் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து எங்கள் கிராமத்திற்கு தீர்வு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.