/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையோர ஆக்கிரமிப்புகளால் அத்திமாஞ்சேரிபேட்டையில் நெரிசல்
/
சாலையோர ஆக்கிரமிப்புகளால் அத்திமாஞ்சேரிபேட்டையில் நெரிசல்
சாலையோர ஆக்கிரமிப்புகளால் அத்திமாஞ்சேரிபேட்டையில் நெரிசல்
சாலையோர ஆக்கிரமிப்புகளால் அத்திமாஞ்சேரிபேட்டையில் நெரிசல்
ADDED : டிச 14, 2025 06:27 AM

பள்ளிப்பட்டு: மாநில நெடுஞ்சாலையில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால், ஆம்புலன்ஸ், தீயணைப்பு உள்ளிட்ட வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.
ஆர்.கே.பேட்டையில் இருந்து பள்ளிப்பட்டு வரை, 20 கி.மீ., துாரத்திற்கு மாநில நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இதில், ஆர்.கே.பேட்டை, அத்திமாஞ்சேரிபேட்டை, பள்ளிப்பட்டு உள்ளிட்ட ஊர்களில், பஜார் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் இந்த சாலையில் அமைந்துள்ளன.
ஆர்.கே.பேட்டை பஜார் பகுதியில் உள்ள மூன்று சாலை கூடும் பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக காலை, மாலை நேரங்களில், பள்ளி, கல்லுாரி வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
நெடுஞ்சாலையோர கடைகள், நெடுஞ்சாலையில் உள்ள வெள்ளை நிற கோடுகளை ஒட்டி உள்ளன. இதனால், நடந்து செல்பவர்களும், இருசக்கர வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிப்படுகின்றனர். அத்திமாஞ்சேரிபேட்டை பஜார் பகுதியில் நேற்று முன்தினம் தீயணைப்பு வாகனம் ஒன்று நெரிசலில் சிக்கிக்கொண்டது.
இதே நிலை தான் அத்திமாஞ்சேரிபேட்டை பஜார் மற்றும் பள்ளிப்பட்டு நகரி கூட்டு சாலை வரை நீடிக்கிறது. சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை துறையினரும், காவல் துறையினரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

