/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழங்குடியினர் குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டும் பணி துவக்கம்
/
பழங்குடியினர் குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டும் பணி துவக்கம்
பழங்குடியினர் குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டும் பணி துவக்கம்
பழங்குடியினர் குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டும் பணி துவக்கம்
ADDED : ஜூலை 14, 2025 11:32 PM
திருத்தணி, திருத்தணி ஒன்றியம், பீரகுப்பம் பகுதியில், 16 பழங்குடியின குடும்பத்தினர் குடிசை வீடுகளில், மின்சாரம், குடிநீர், சாலை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல், கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்தனர்.
கடந்த வாரம் திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன், பழங்குடியினர் வசிக்கும் இடத்திற்கு சென்று, ஒரு நாள் முழுதும் முகாமிட்டு குறைகளை கேட்டறிந்தார். மேலும், அவர்களுக்கு தேவையான மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இரு நாட்களில் ஏற்படுத்தி கொடுத்தார்.
நேற்று காலை 16 குடும்பத்தினருக்கும், அரசு சார்பில் 4.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு, அடிக்கல் நாட்டினார். நான்கு மாதத்திற்குள் வீடுகளை முழுமையாக கட்டி, பழங்குடியின மக்களிடம் ஒப்படைக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.