தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அலையில் மூழ்கி கட்டட தொழிலாளி பலி தடையை மீறிய படகு சவாரியால் சோகம்

அலையில் மூழ்கி கட்டட தொழிலாளி பலி தடையை மீறிய படகு சவாரியால் சோகம்

அலையில் மூழ்கி கட்டட தொழிலாளி பலி தடையை மீறிய படகு சவாரியால் சோகம்


ADDED : செப் 28, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பழவேற்காடு, செப். 29–

பழவேற்காடில் தடையை மீறி படகு சவாரி சென்று, முகத்துவாரம் பகுதியில் உள்ள கடலில் குளித்தபோது, அலையில் சிக்கி கட்டட தொழிலாளி பலியானார்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அடுத்த விஜயகரிசல்குளம் பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி, 51. கட்டட தொழிலாளி. இவர், சென்னை அம்பத்துார் பகுதியில் தங்கி, கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

நேற்று முன்தினம், உறவினர்களுடன் பழவேற்காடு சுற்றுலா வந்தார். அங்கிருந்து படகு மூலம், பழவேற்காடு முகத்துவாரம் பகுதிக்கு சென்று, கடலில் குளித்து விளையாடினார்.

அப்போது, ராட்சத அலையில் சிக்கி மூழ்கினார். இதில் மூர்ச்சையாகி மயங்கிய குருமூர்த்தியை, உறவினர்கள் மீட்டு, பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு, இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்த திருப்பாலைவனம் போலீசார், குருமூர்த்தியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பழவேற்காடில் படகு சவாரி தடை செய்யப்பட்டு உள்ளது. அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால், விடுமுறை நாட்களில் படகுகள் மூலம், முகத்துவாரம் பகுதிக்கு செல்வோர், அங்கு மது அருந்திவிட்டு, போதையில் கடல் அலைகளில் விளையாடும்போது, அதில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட துறையினருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, படகு சவாரிக்கான தடையை தீவிரமாக கண்காணித்து, உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us