ADDED : ஆக 17, 2026 08:31 PM
ஆர்.கே. பேட்டை, ஆக. 18-–
தனியார் கோவில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளி, நேற்று துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆர்.கே.பேட்டை அடுத்த கோபாலபுரம் அருகே, தனியாருக்கு சொந்தமான இடத்தில், முருகன் கோவில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த கோவில் கட்டுமான பணியில், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ராகுல் குமார், 28, என்பவர் பணியாற்றி வந்தார். நேற்று, வழக்கம்போல் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த இவர், காலை 11:00 மணியளவில் அவரது அறைக்கு திரும்பினார். நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால், அவருடன் பணியாற்றுபவர்கள், ராகுல் குமாரின் அறைக்கு சென்று பார்த்தனர்.
அப்போது ராகுல் குமார், அவரது அறையில் உள்ள மின் விசிறியில் துாக்கில் தொங்கியபடி கிடந்தார். அவரை மீட்ட சக தொழிலாளர்கள், சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், வரும் வழியிலேயே ராகுல் குமார் இறந்து விட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆர்.கே.பேட்டை போலீசார், இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
