/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூந்தமல்லியில் கலந்தாய்வு கூட்டம்
/
பூந்தமல்லியில் கலந்தாய்வு கூட்டம்
ADDED : நவ 10, 2024 09:02 PM
பூந்தமல்லி:ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் காவல் துறை - பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம், பூந்தமல்லியில் நடந்தது.
ஆவடி கமிஷ்னர் சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பூந்தமல்லி, நசரத்பேட்டை, வெள்ளவேடு, செவ்வாய்பேட்டை, திருவேற்காடு உள்ளிட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் ஆவடி கமிஷனர் சங்கர் பேசுகையில்,''சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு, ரவுடிகள் மீதான நடவடிக்கைகளில் தனி கவனம் செலுத்தி வருகிறோம். இந்த கூட்டத்தில் மக்கள் கூறும் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி பேசுகையில்,''பூந்தமல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை அதிகமாக உள்ளது. கஞ்சா விற்பவர்களையும் அடையாளம் கண்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக் வேண்டும். மூன்று சீட்டு, ஒரு சீட்டு லாட்டரிகள் உள்ளிட்ட பல தவறான விஷயங்களை ஒடுக்க வேண்டும்,'' என்றார்.