/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெரிசலை தவிர்க்க கருத்துக்கேட்பு
/
நெரிசலை தவிர்க்க கருத்துக்கேட்பு
ADDED : பிப் 04, 2025 12:59 AM
சென்னை, சென்னை பெருநகரின் எல்லையை, 5,904 சதுர கி.மீ.,யாக விரிவாக்கம் செய்ய, சி.எம்.டி.ஏ., நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த எல்லையை அடிப்படையாக வைத்து, புதிய போக்குவரத்து செயல்திட்ட தயாரிப்பு பணிகளை, கும்டா துவக்கிஉள்ளது.
இதன்படி, மாநகர் பேருந்துகள், புறநகர் மின்சார ரயில், மெட்ரோ ரயில் சேவைகளை பொதுமக்கள் எளிதாக பயன்படுத்த புதிய வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக ஒரு சேவையை பயன்படுத்துவோர், அடுத்த சேவைக்கு எளிதாக மாறும் வகையில், இணைப்பு வசதிகளை ஏற்படுத்த இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க, அதில் முக்கிய பங்கேற்பாளர்களாக உள்ள பேருந்து, லாரி, ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டத்தை, சென்னையில் கும்டா நேற்று நடத்தியது.
பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கான அடிப்படை காரணங்கள், அதை தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து, ஓட்டுநர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாகவும், மேலும் பல பிரிவினரிடம் கருத்து கேட்க உள்ளதாகவும், கும்டா அதிகாரிகள் தெரிவித்தனர்.

