/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காலை உணவு திட்டம் அதிகாரிகளுடன் ஆலோசனை
/
காலை உணவு திட்டம் அதிகாரிகளுடன் ஆலோசனை
ADDED : ஏப் 10, 2025 08:32 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காலை உணவு திட்டம் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டர் பிரதால் தலைமை வகித்து பேசியதாவது:
முதல்வரின் காலை உணவு திட்ட பணிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறித்து வட்டார கல்வி அலுவலர்கள் தினமும் பதிவிட வேண்டும். உணவு சாப்பிடும் மாணவர்களின் எண்ணிக்கை குறையாமல் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
காலை உணவு திட்டத்தில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கண்காணித்து, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் சுவையாகவும் தரமாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
வாரந்தோறும் மகளிர் திட்ட அலுவலர்கள் காலை உணவு திட்டம் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடத்தி, எவ்வித தொய்வு இல்லாமல் சிறப்பாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

