பழுதாகி நின்ற லாரி மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து
பழுதாகி நின்ற லாரி மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து
UPDATED : அக் 15, 2026 07:09 PM
ADDED : அக் 15, 2026 07:06 PM

ஊத்துக்கோட்டை: பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது, கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில், சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையில் இருந்து லாரி ஒன்று, பெரியபாளையம், பாலவாக்கம் வழியே, ஊத்துக்கோட்டை நோக்கி சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தது.
தாராட்சி கிராமம் அருகே சென்று கொண்டு இருந்தபோது, லாரியில் ஏற்பட்ட பழுது காரணமாக, சாலையோரம் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை, சென்னையில் இருந்து திருப்பதிக்கு அதே மார்க்கத்தில் வந்த கன்டெய்னர் லாரி, தாராட்சி கிராமத்தில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது வேகமாக மோதியது.
இதில், கன்டெய்னர் லாரியின் முன் பகுதி சேதம் அடைந்தது. ஆனால், ஓட்டுநர் பிரபு, 38, அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
இந்த விபத்தால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின், கிரேன் உதவியுடன் லாரிகள் அகற்றப்பட்டன.
இதனால், காலை முதல் மாலை வரை, சென்னை – திருப்பதி நெடுஞ்சாலை ஒரு வழியாக மாற்றப்பட்டதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
