/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மணலியில் கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் மறியல் பிரதான சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
/
மணலியில் கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் மறியல் பிரதான சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
மணலியில் கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் மறியல் பிரதான சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
மணலியில் கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் மறியல் பிரதான சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
ADDED : பிப் 17, 2024 12:33 AM

மணலி:பொன்னேரி நெடுஞ்சாலை, மணலி விரைவுச் சாலை மற்றும் மாதவரம் விரைவுச் சாலையில் கன்டெய்னர் லாரி போக்குவரத்து அதிகமுள்ளது. இப்பகுதியில் கன்டெய்னர் லாரிகளுக்கு என, தற்காலிக கான்கிரீட் தடுப்பு கற்கள் மற்றும் இரும்பு தடுப்புகள் வைத்து, தனிப்பாதை ஏற்படுத்தப்பட்டது.
மணலிபுதுநகர் பொன்னேரி நெடுஞ்சாலையில் பட்டமந்திரி முதல் எம்.எப்.எல்., சந்திப்பு வரையும்; மணலி விரைவுச் சாலையில் சாத்தாங்காடு சந்திப்பு வரை 13 கி.மீ., துாரத்திற்கும், கன்டெய்னர்களுக்கு லாரிகளுக்கு தனிப்பாதை உள்ளது.
இந்த தடுப்புகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது.
இதைக் கண்டித்தும், தடுப்பு கற்களை உடனடியாக அகற்றக்கோரியும், சென்னை கன்டெய்னர் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட மூன்று சங்கங்களைச் சேர்ந்தோர் என, 300க்கும் மேற்பட்டோர், மணலி - ஆண்டார்குப்பம் செக்போஸ்ட் சந்திப்பில், நேற்று காலை திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதில், பொன்னேரி நெடுஞ்சாலை, மணலி விரைவுச் சாலை, மாதவரம் விரைவுச் சாலைகளில், பல கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டன.
இரண்டு மணி நேரம் தொடர்ந்த மறியலால், சுற்றுவட்டார பகுதி முழுதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. செங்குன்றம் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், அவர்களிடம் சமரசம் பேசினர்.
மேலும், இதுகுறித்து, ஒரு வாரத்தில் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படும் என, உறுதியளித்ததை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து, சென்னை கன்டெய்னர் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் சங்கச் செயலர் பி.சுப்ரமணி கூறுகையில், ''தடுப்புக் கற்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு, 10 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இரவு வேளைகளில் இரும்பு தடுப்பு கற்கள் மற்றும் இரும்பு தடுப்புகளில் மோதி விபத்து ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.
லாரிகள் திரும்பும் நேரங்களில், தடுப்பு கற்களில் சிக்கி சேதமடைகின்றன. எனவே, அவற்றை உடனடியாக அகற்றிட வேண்டும். இல்லாவிடில், மாற்று வழியில் போராட்டம் நடக்கும்,'' என்றார்.
விதிமீறல் தடுப்பு
தடுப்பு கற்கள் அமைக்கப்பட்டதில் இருந்து, கன்டெய்னர் லாரிகள் தனிப்பாதையில் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் தனிநபர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்கின்றனர். கன்டெய்னர் லாரி ஓட்டுனர்கள் விதிமீறி, பொதுவழியில் ஏறி வந்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் காரணமாக, விரைவாக செல்ல முடியவில்லை. விதிமீறல் தடுக்கப்பட்டுள்ளது. எனவே, தடுப்பு கற்களை அகற்ற வேண்டும் எனக் கோரி வருகின்றனர். இந்த தடுப்பு கற்களால், ஒரு விபத்து மட்டுமே நடந்துள்ளது. அதுவும், பைக்கில் ஸ்டான்ட் எடுக்காமல் வந்ததன் கவனக்குறைவால்,அந்த விபத்து நிகழ்ந்தது.
-போக்குவரத்து போலீஸ்.