/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் தொடர் மழை சாலை, வீடுகளை சுற்றி தேங்கிய தண்ணீர்
/
திருவள்ளூரில் தொடர் மழை சாலை, வீடுகளை சுற்றி தேங்கிய தண்ணீர்
திருவள்ளூரில் தொடர் மழை சாலை, வீடுகளை சுற்றி தேங்கிய தண்ணீர்
திருவள்ளூரில் தொடர் மழை சாலை, வீடுகளை சுற்றி தேங்கிய தண்ணீர்
ADDED : டிச 13, 2024 02:33 AM

திருவள்ளூர்:திருவள்ளூரில் பெய்து வரும் பலத்த மழையால், கலெக்டர் அலுவலக வளாகம், சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது.
தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த அழுத்த தாழ்வு மண்டலம் வலுத்துள்ளதால், திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
திருவள்ளூர் ஜே.என்.சாலையில் மழைநீர் கால்வாய் அடைப்பால், தண்ணீர் சாலையில் குளம் போல் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் மழையில் தத்தளித்தபடி சென்றனர்.
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட ராஜாஜி சாலை, பூங்கா நகர், ஜவஹர் நகர், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வனத்துறை மற்றும் வேளாண் துறை அலுவலகத்திற்கு செல்லும் வழி, எஸ்.பி., அலுவலக சாலை, மாவட்ட விளையாட்டு மைதானம் உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் குளமாக தேங்கி உள்ளது.
குடியிருப்புகளைச் சுற்றிலும் மழைநீர் தேங்கியதால், அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். சாலைகளில் தேங்கிய மழைநீரை அகற்ற வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்திற்கு பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.