/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 07, 2026 06:27 AM
மீஞ்சூர்:பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி வடசென்னை அனல் மின்நிலைய தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ள, வடசென்னை அனல் மின்நிலையங்களில், 2,630 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு, 1,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.
பணி நிரந்தரம், அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில், நேற்று, வடசென்னை அனல் மின்நிலைய நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கை:
தி.மு.க., கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி, ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். தற்போது அரசு அறிவித்த, தினக்கூலி, 766 ரூபாயை அனைத்து தொழிலாளர்களுக்கும், நேரடியாக வழங்க வேண்டும்.
புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும். பணியின்போது உயிரிழந்த மற்றும் விபத்துகளில் பாதிக்கப்படும் நபர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

