/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆவடியில் 167 போலீசார் திடீர் இடமாற்றத்தால் சர்ச்சை
/
ஆவடியில் 167 போலீசார் திடீர் இடமாற்றத்தால் சர்ச்சை
ஆவடியில் 167 போலீசார் திடீர் இடமாற்றத்தால் சர்ச்சை
ஆவடியில் 167 போலீசார் திடீர் இடமாற்றத்தால் சர்ச்சை
ADDED : ஜூலை 20, 2025 10:44 PM
ஆவடி:ஆவடியில் சிறப்பு எஸ்.ஐ., முதல் மற்றும் இரண்டாம் நிலை காவலர்கள் என, 167 போலீசார், திடீர் பணியிட மாற்றத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.
ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், ஒரே காவல் நிலையத்தில் மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வரும் சிறப்பு எஸ்.ஐ.,கள், முதல் நிலை காவலர், இரண்டாம் நிலை காவலர் என 167 போலீசாரை பணி இடமாற்றம் செய்து, கூடுதல் கமிஷனர் பவானீஸ்வரி நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார்.
வழக்கமாக, இடமாறுதல் குறித்து சம்பந்தப்பட்ட போலீசாரிடம் கருத்து கேட்கப்படும். ஆனால், தற்போது இடமாற்றம் செய்யப்பட்ட போலீசாரிடம் எவ்வித கருத்து கேட்காமல் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக, பெண் போலீசார் 50 வயதை கடந்த சிறப்பு எஸ்.ஐ.,கள் மற்றும் முதல் நிலை போலீஸ்காரர்கள் தொலை துாரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எனவே, ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தலையிட்டு, சம்பந்தப்பட்டவர்களின் விருப்பத்தை கேட்டு, அதன் அடிப்படையில் இடமாற்றம் செய்ய பரிசீலிக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.