தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ காப்பர் ஒயர் திருடிய தொழிலாளி கைது

காப்பர் ஒயர் திருடிய தொழிலாளி கைது

காப்பர் ஒயர் திருடிய தொழிலாளி கைது


ADDED : ஆக 23, 2026 05:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2026 05:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி, ஆக. 24–

கவரைப்பேட்டை அருகே, தனியார் தொழிற்சாலையில் காப்பர் ஒயர் திருடிய, 37 வயது வடமாநில தொழிலாளியை, போலீசார் கைது செய்தனர்.

கவரைப்பேட்டை அருகேயுள்ளா போரக்ஸ் நகரில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில், அடிக்கடி காப்பர் ஒயர் திருடு போனது தெரியவந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பகவான் நாயக், 37, என்ற தொழிலாளி, தொழிற்சாலையின் சுற்றுச்சுவரை ஒட்டிய பகுதியில் இருந்து, 2 கிலோ காப்பர் ஒயருடன் நடந்து சென்றுள்ளார்.

அப்போது, தொழிற்சாலையின் மேற்பார்வையாளர் அவரை பிடித்து, காப்பர் ஒயரை பறிமுதல் செய்து விசாரித்தார். அதில், காப்பர் ஒயரை திருடி, சுற்றுச்சுவருக்கு வெளியே வீசிவிட்டு, வேலை முடிந்து வெளியே சென்று, வீசிய காப்பர் ஒயரை பகவான் நாயக் எடுத்து செல்வது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்படி வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார், பகவான் நாயக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us