தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ டிரான்ஸ்பார்மரில் காப்பர் கம்பி திருட்டு : மின் பொறியாளர் புகார் 

டிரான்ஸ்பார்மரில் காப்பர் கம்பி திருட்டு : மின் பொறியாளர் புகார் 

டிரான்ஸ்பார்மரில் காப்பர் கம்பி திருட்டு : மின் பொறியாளர் புகார் 


ADDED : ஆக 29, 2026 07:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2026 07:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாலங்காடு: மணவூரில் டிரான்ஸ்பார்மர்களில் காப்பர் ஒயர் திருடு போனது குறித்த புகாரின்படி, போலீசார் மர்மநபர்களை தேடி வருகின்றனர். 

திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாகசாலை மற்றும் விடையூர் சாலையில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு இரண்டு டிரான்ஸ்பார்மர்களை ஆப் செய்த மர்ம நபர்கள், அதிலிருந்த பெட்டியை உடைத்து, காப்பர் கம்பிகளை திருடிச் சென்றனர்.

தகவலறிந்த மின்வாரிய உதவி பொறியாளர் முனுசாமி, நேற்று அதிகாலை சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். டிரான்ஸ்பார்மரில் இருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பர் கம்பிகள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இந்த டிரான்ஸ்பார்மர் வாயிலாக விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு மின்சாரம் செல்வதால், நேற்று முன்தினம் இரவு முழுதும் மின்சாரம் இன்றி, அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர். நேற்று காலை மின்சாரம் சீரமைக்கப்பட்டது.

இதுகுறித்த புகாரின்படி, திருவாலங்காடு திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us