ADDED : மார் 07, 2026 05:03 AM
அ நிறம் | அளவு
திருத்தணி: திருத்தணி காவல் நிலையத்தின் புதிய இன்ஸ்பெக்டராக சிவகுமார் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.
திருத்தணி காவல் நிலைய சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டராக, கடந்த மாதம் 6ம் தேதி ஜெயவேல் பொறுப்பேற்று கொண்டார்.
இவர், அதே மாதம், 24ம் தேதி காஞ்சிபுரம் சரகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இவருக்கு பதிலாக, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சிவகுமார், திருத்தணி காவல் நிலைய இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். இவர், நேற்று காலை பொறுப்பேற்று கொண்டார்.
