ADDED : மார் 03, 2024 01:18 AM
அ நிறம் | அளவு
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அடுத்த ராமச்சந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயவேலு. அவரது மனைவி லட்சுமி. இருவரும் நேற்று வயல்வெளிக்கு சென்றிருந்தனர்.
அப்போது இவர்களின் குடிசை வீடு தீப்பற்றி எரிவதாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் தகவல் அளித்தனர்.
பள்ளிப்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால், குடிசை வீடு முற்றிலுமாக தீயில் எரிந்து நாசம் ஆனது. ராமச்சந்திராபுரம் ஊராட்சி தலைவர் தாட்சாயிணி, லட்சுமியின் குடும்பத்தினருக்கு, அரிசி, காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.
