ADDED : செப் 12, 2025 10:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி நேரு நகரைச் சேர்ந்தவர் ராசுதேவர், 70. மனைவி உயிரிழந்ததால் தனியாக குடிசை வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் ஹைதராபாதில் உயிரிழந்த தன் மகன் ரமேஷ் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.
நேற்று மாலை திடீரென அவரது வீடு தீப்பற்றி எரிந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பகுதிமக்கள், திருத்தணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், இரண்டு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் 'டிவி, பிரிஜ்' உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமாயின. இதுகுறித்து திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.