/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரி மீன்வளக் கல்லுாரியில் முனைவர் படிப்புகளுக்கு கலந்தாய்வு
/
பொன்னேரி மீன்வளக் கல்லுாரியில் முனைவர் படிப்புகளுக்கு கலந்தாய்வு
பொன்னேரி மீன்வளக் கல்லுாரியில் முனைவர் படிப்புகளுக்கு கலந்தாய்வு
பொன்னேரி மீன்வளக் கல்லுாரியில் முனைவர் படிப்புகளுக்கு கலந்தாய்வு
ADDED : ஜன 08, 2025 08:02 PM
பொன்னேரி:தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலையில், முதுநிலை மற்றும் முனைவர் படிப்பிற்கான கலந்தாய்வு, நேற்று பொன்னேரியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்., மீன்வளக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நடந்தது.
இதில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்ட மேற்படிப்பு மற்றும் முனைவர் படிப்பிற்கான நுழைவுத்தேர்வில் பங்கேற்றனர்.
இதில், 52 மாணவர்கள் முதுநிலை மீன்வள அறிவியல் மற்றும் தொழில்நுட்பு படிப்பிற்கும், 26 மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு பெற்றனர்.
அவர்களுக்கு கலந்தாய்வு அடிப்படையில், பல்கலை துணைவேந்தர் பெலிக்ஸ், மாணவர் சேர்க்கைக்கான ஆணைகளை வழங்கினார்.
பல்கலை தேர்வு கட்டுப்பாட்டாளர் முனைவர் ராவணேஸ்வரன், தமிழ்நாட்டில் உள்ள மீன்வள கல்லுாரிகளின் முதல்வர்கள் முனைவர் ஜெயசகிலா, முனைவர் அகிலன், முனைவர் சண்முகம், முனைவர் பாலசுந்தரி, முனைவர் உமா மற்றும் பேராசிரியர்கள் உடனடிருந்தனர்.