/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தம்பதி தற்கொலை திருவள்ளூரில் சோகம்
/
தம்பதி தற்கொலை திருவள்ளூரில் சோகம்
ADDED : மார் 31, 2025 03:23 AM

திருவள்ளூர்:திருவள்ளூர், பெரியகுப்பம் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ், 59. அம்பத்துாரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி இந்திரா, 51. தம்பதிக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர். மூவருக்கும் திருமணமான நிலையில், மகன் சாம்ராஜ், 28 மற்றும் மருமகள் புனிதா, 25, ஆகியோருடன் வசித்து வந்தனர்.
குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்வராஜ், கடந்த ஓராண்டாக நோயால் கடும் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தம்பதி இருவரும் துாங்க சென்றனர். மகனும், மருமகளும் மற்றொரு அறையில் துாங்கினர்.
காலையில் எழுந்து மகன் சாம்ராஜ், பெற்றோரின் அறைக்கதவை தட்டியபோது திறக்கப்படவில்லை.
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது, செல்வராஜ் - இந்திரா தம்பதி மினி விசிறியில் ஒரே கயிற்றில் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.
திருவள்ளூர் நகர போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.