/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்சாரம் பாய்ந்து பசு மாடு உயிரிழப்பு
/
மின்சாரம் பாய்ந்து பசு மாடு உயிரிழப்பு
ADDED : அக் 29, 2025 02:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமழிசை: திருமழிசை பிரையாம்பத்து பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன், 39. இவரது பசுமாடு, நேற்று முன்தினம் இரவு மேய்ச்சலுக்கு சென்று விட்டு வந்து கொண்டிருந்தது. அப்போது பெய்த மழையால், வீட்டின் அருகே உள்ள மின்கம்பத்தில் ஏற்பட்ட மின்கசிவால், மின்சாரம் பாய்ந்து பசு மாடு உயிரிழந்தது.
தகவலறிந்த பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி, தமிழக முதல்வரின் நிவாரண தொகையாக 40,000 ரூபாயை பாஸ்கரனிடம் வழங்கினார்.

