/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்சாரம் பாய்ந்து மாடு உயிரிழப்பு
/
மின்சாரம் பாய்ந்து மாடு உயிரிழப்பு
ADDED : ஜன 22, 2025 08:06 PM
மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த, செப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 34; மாடுகளை வளர்த்து, தொழில் செய்து வருகிறார். நேற்று காலை, பால் கறந்தபின், மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றன.
அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் உள்ள தனியார் சிமென்ட் தொழிற்சாலை அருகே, வடசென்னை அனல் மின்நிலையம் நான்காவது நிலை கட்டுமான பணிகளுக்காக, புதைவழி கேபிள் வாயிலாக மின்சாரம் கொண்டு செல்லப்பபடுகிறது.
புதைவழி மின்ஒயரில் இருந்த மின்கசிவில் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளில் ஒன்று சிக்கியது. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மாடு உயிரிழந்தது.
தகவல் அறிந்த மின்வாரியத்தினர் அங்கு சென்று, மின் துண்டிப்பு செய்து, சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக வெங்கடேசன், மீஞ்சூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்படி போலீசார் விசாரிக்கின்றனர்.

