/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தெருக்களில் மாட்டு சாணம் பூந்தமல்லியில் சுகாதார சீர்கேடு
/
தெருக்களில் மாட்டு சாணம் பூந்தமல்லியில் சுகாதார சீர்கேடு
தெருக்களில் மாட்டு சாணம் பூந்தமல்லியில் சுகாதார சீர்கேடு
தெருக்களில் மாட்டு சாணம் பூந்தமல்லியில் சுகாதார சீர்கேடு
ADDED : நவ 18, 2024 02:31 AM

பூந்தமல்லி: பூந்தமல்லி நகராட்சி, 20 வது வார்டில் ரைட்டர் தெரு, துபாஷ் தெருவில் ஏராளமான குடியிருப்புக்கள் உள்ளன. இங்கு சிலர், வீடுகளில் மாடுகளை வளர்க்கின்றனர். இந்த மாடுகள் சாலையில் சாணம், சிறுநீர் கழிப்பதால், தெருக்களில் துார்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, ரைட்டர் தெரு குடியிருப்பு சங்க தலைவர் டி.ரமேஷ்பாபு கூறியதாவது:
எங்கள் பகுதியில் 700 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இதில், மூன்று குடும்பங்களில், 500க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்கின்றனர். இந்த மாடுகள் இரவு நேரத்தில் தெருக்களில் படுத்து உறங்குகிறது. மாடுகளுக்கு உணவங்களில் இருந்து வீணாகும் கழிவுகள் உணவாக அளிக்கப்படுகின்றன. இவற்றை உண்டு மாடுகள் வெளியேற்றும் கழிவுகள் துர்நாற்றம் வீசுகிறது.
எங்கள் தெரு முழுக்க மாட்டுச்சாணமாக உள்ளது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் ஆபத்து உள்ளது. இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. பூந்தமல்லி நகராட்சியின் அனைத்து பகுதிகளும் வளர்ச்சி அடைந்த நிலையில், மாடுகளால் எங்கள் பகுதி மட்டும் வளர்ச்சி இல்லாமல் படு மோசமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.