/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாட்டு தொழுவமான பூண்டி சிறுவர் பூங்கா
/
மாட்டு தொழுவமான பூண்டி சிறுவர் பூங்கா
ADDED : நவ 27, 2025 03:30 AM

ஊத்துக்கோட்டை: நவ. 27-: சிறுவர்கள் விளையாடவும், பெரியவர்கள் மாலை நேரத்தில் பொழுதுபோக்கவும் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா, தற்போது மாடுகள் ஓய்வெடுக்கும் தொழுவமாக மாறியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி கிராமத்தில் நீர்த்தேக்கம் உள்ளது. இது, சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 1944ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நீர்த்தேக்கத்தின் முழு கொள்ளளவு 3.23 டி.எம்.சி., நீர்மட்டம் 35 அடி.
இங்கு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, அதிகளவில் சுற்றுலா பயணியர் வருகின்றனர். உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணியர், சிறுவர் - சிறுமியர் விளையாட, இங்குள்ள பேருந்து நிலையம் எதிரே சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது.
முறையான பராமரிப்பு இல்லாததால், தற்போது மாடுகள் ஓய்வெடுக்கும் தொழுவமாக மாறியுள்ளது. எனவே, திருவள்ளூர் கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பூண்டி கிராமத்தில் உள்ள சிறுவர் பூங்காவை சீரமைக்க வேண்டும் என, சுற்றுலா பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

