/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பைக் கவிழ்ந்து விபத்து கிரேன் ஆப்பரேட்டர் பலி
/
பைக் கவிழ்ந்து விபத்து கிரேன் ஆப்பரேட்டர் பலி
ADDED : டிச 04, 2025 05:14 AM
மப்பேடு: மப்பேடு அருகே சாலையோர பள்ளத்தில் இரு சக்கர வாகனம் கவிழ்ந்த விபத்தில் கிரேன் ஆப்பரேட்டர் உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பிச்சிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கோபி, 46. இவருக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
இவர் மப்பேடு பகுதியில் உள்ள சாய் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தில் கிரேன் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் மதியம் வேலையை முடித்து ஹீரோ பேஷன் பிளஸ் இரு சக்கர வாகனத்தில் தண்டலம் நெடுஞ்சாலையில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
கூவம் கலைமகள் கல்லுாரி அருகே வந்த போது திடீரென இரு சக்கர வாகனம் தடுமாறி சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மப்பேடு பகுதியில் உள்ள சவீதா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்த மப்பேடு போலீசார் உடலை திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

