தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/லாட்டரி விற்ற இருவர் கைது

லாட்டரி விற்ற இருவர் கைது

லாட்டரி விற்ற இருவர் கைது


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 09:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 09:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மணவாள நகர்: மணவாள நகர் பகுதியில், ஆன்லைனில் கேரளா லாட்டரி விற்பனை செய்த இருவரை, போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் போலீசார், நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மணவாள நகர், கணேசபுரம் பகுதியில், சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் விஜயேந்திரன், 49, மற்றும் காக்காளூர் பாபு, 41, என தெரிய வந்தது. இவர்கள் இருவரும், ஆன்லைன் மூலம், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரிகளை விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து வழக்கு பதிந்த மணவாள நகர் போலீசார், இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ஒரு மொபைல் போன், ஒரு பிரின்டர் மற்றும் பேப்பர் ரோல், ஐந்து பில் மற்றும் 700 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இருவரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us