தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கிரைம் கார்னர்: திருவள்ளூர்

 கிரைம் கார்னர்: திருவள்ளூர்

 கிரைம் கார்னர்: திருவள்ளூர்


ADDED : ஜூன் 29, 2026 03:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2026 03:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சக ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர், விஷ்ணுவாக்கத்தைச் சேர்ந்தவர் சூர்யா, 19; தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 26ம் தேதி மாலை திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்தார். அப்போது, சக ஊழியரான ராஜேஷ், 19 மற்றும் அவரது நண்பரான சந்தோஷ், 19 ஆகியோர், சூர்யாவை தாக்கி மொபைல் போன் மற்றும் 1,400 ரூபாய் பறித்து சென்றனர். இது குறித்த புகாரை அடுத்து திருவள்ளூர் நகர போலீசார் இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

நகைக்கடை ஊழியர் மாயம்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அடுத்த கொளத்துாரைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 43. இவர், பள்ளிப்பட்டில் உள்ள நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர், கடந்த 22ம் தேதி மாலை அவரது வீட்டில் இருந்து வெளியில் சென்றார். ஆனால், மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மனைவி ஹேமாவதி, பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார், சந்திரசேகரை தேடிவருகின்றனர்.

மனைவி மாயம்: கணவன் புகார்

திருவள்ளூர்: திருவள்ளூரைச் சேர்ந்தவர் சிவபிரசாந்த், 40. சிவபிரசாந்திற்கும் அவரது மனைவிக்கும் கடன் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல கடந்த 24ம் தேதி மீண்டும் தகராறு ஏற்படவே, 26ம் தேதி காலை வீட்டை விட்டு வெளியே சென்ற அவரது மனைவி பின் வீடு திரும்பவில்லை. இது குறித்து நேற்று முன்தினம் சிவபிரசாந்த் அளித்த புகாரின்படி திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

ஊத்துக்கோட்டை: எல்லாபுரத்தைச் சேர்ந்தவர் வாசு. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த, 26ம் தேதி மூவரும் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில், பின் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து வாசு அளித்த புகாரின்படி பெரியபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மனைவி பிரிவால் கணவன் தற்கொலை



திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது உசைன், 43; மொபைல் போன் கடைக்காரர். இவரது மனைவி நஸ்ரின், 40. கடந்த வாரத்தில் தம்பதியிடையே ஏற்பட்ட சண்டையில் குழந்தையை கணவனிடம் ஒப்படைத்து விட்டு மனைவி நஸ்ரின், திருவண்ணாமலையில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால், விரக்தியடைந்த முகமது உசைன், தன் தாயும் குழந்தையும் உறவினர் வீட்டில் இருந்த நேரத்தில், நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புல்லரம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us