தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கிரைம் கார்னர்:திருவள்ளூர்

 கிரைம் கார்னர்:திருவள்ளூர்

 கிரைம் கார்னர்:திருவள்ளூர்


ADDED : ஆக 01, 2026 04:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 01, 2026 04:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தம்பதியை தாக்கியோருக்கு வலை ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அடுத்த பாலாபுரம் காலனியை சேர்ந்த பஞ்சாட்சரம், 35, என்பவர், மனைவி ஜெயப்பிரியாவுடன், நேற்று பாலாபுரத்தில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, மது போதையில் வழிமறித்த பகவதி, சாரதி ஆகிய இருவரும், வீண் தகராறு செய்து தம்பதியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின்படி, இருவரையும், ஆர்.கே.பேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.

மக்களுக்கு தொல்லை: வாலிபருக்கு சிறை திருவாலங்காடு: மணவூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன், 27, என்பவர், நேற்று காலை திருவாலங்காடு பஜார் பகுதியில், மதுபோதையில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்தார். புகாரின்படி அங்கு வந்த திருவாலங்காடு போலீசார், கண்ணனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

22 கிலோ குட்காவுடன் வாலிபர் கைது மணலிபுதுநகர்: மணலிபுதுநகர் நாப்பாளையம் விநாயகர் கோவில் அருகே போலீசார் நடத்திய கண்காணிப்பில், சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த மணிகண்டன், 25, என்பவரை விசாரித்தனர். அவரது பையில், 10,000 ரூபாய் மதிப்புள்ள ஹான்ஸ், மாவா, கூலிப் உள்ளிட்ட 22 கிலோ குட்கா பொருட்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து, மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.

பைக் திருடிய இருவர் கைது திருவொற்றியூர்: திருவொற்றியூர், ராஜாஜி நகரை சேர்ந்த ரஹமத்துல்லா, 21, கடந்த 9ம் தேதி, செட்டித் தெருவில் உள்ள நண்பர் வீட்டின் வெளியே, 'யமஹா ஆர் - 15' ரக பைக்கை நிறுத்தி விட்டு, உறவினர் வீட்டிற்கு சென்றார். இரு நாட்கள் கழித்து வந்து பார்த்தபோது, பைக் திருடு போயிருந்தது. திருவொற்றியூர் போலீசார் விசாரித்து, சம்பவத்தில் ஈடுபட்ட மதுரவாயலைச் சேர்ந்த ராகுல், 21, ஹரி விக்னேஷ், 22, ஆகியோரை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். ஹரி விக்னேஷ் தனியார் மருத்துவக் கல்லுாரியில் மயக்க மருந்து நிபுணராக பணியாற்றி வருவது தெரியவந்தது.

பேருந்தில் பெண்ணை சீண்டியவர் கைது புதுவண்ணாரப்பேட்டை: திருவான்மியூரில் இருந்து சுங்கச்சாவடி நோக்கிச் சென்ற தடம் எண் '6டி' மாநகர பேருந்தில், திருவொற்றியூரைச் சேர்ந்த 23 வயது ஐ.டி., பெண் ஊழியர் பயணித்தார். அப்போது, பின் இருக்கையில் இருந்த நபர், அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். சுங்கச்சாவடி சந்திப்பு அருகே வந்தபோது, அந்த நபர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில், பெங்களூரைச் சேர்ந்த பிரவீன்குமார், 44, என்பதும், சென்னையில் வேலை தேடி வருவதும் தெரிந்தது. இதையடுத்து, பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி எண்ணுார்: எர்ணாவூர், சுனாமி குடியிருப்பு, 44வது பிளாக்கை சேர்ந்த கூலி தொழிலாளி சுரேஷ், 41, நேற்று முன்தினம் மது போதையில், நான்காவது மாடி பால்கனியில் நின்று கொண்டிருந் தார். அப்போது அவர் தடுமாறி விழுந்ததில், தலையில் காயமடைந்தார். அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கும் முன், அவர் உயிரிழந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us