UPDATED : ஜூலை 14, 2026 06:23 PM
ADDED : ஜூலை 14, 2026 06:23 PM
புல்லரம்பாக்கம்: திருவள்ளூர் அடுத்த கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் நாராயணமூர்த்தி, 62. கடந்த 12ம் தேதி மாலை, திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து, அவரது மகன் ராம் நரேஷ் கொடுத்த புகாரின்படி, புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
காக்களூரில் இளைஞர் மாயம் திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெரோன், 23. கணினி அறிவியல் டிப்ளமா படிப்பு முடித்து வீட்டிலிருந்த இவர், கடந்த 11ம் தேதி மாலை மாயமானார்.
உறவினர்கள், நண்பர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, இவரது உறவினர் ஆரோக்கியராஜ் கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய இருவர் கைது திருவள்ளூர்: திருவள்ளூர் காக்களூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர், 35. ஆட்டோ ஓட்டுநர். சில தினங்களுக்கு முன், இவரது ஆட்டோவை சேதப்படுத்தி, அதிலிருந்த பணம் திருடப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் காலை, அதே பகுதியைச் சேர்ந்த, 16 வயது சிறுவன், விக்னேஷ், 19, ஆகியோரிடம் இதுகுறித்து விசாரித்துள்ளார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், இருவரும் சங்கரை தாக்கியுள்ளனர். சங்கர் கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
பிளஸ் 2 மாணவி மாயம் திருவள்ளூர்: திருவள்ளூர் காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த, 15 வயது சிறுமி, திருவள்ளூர் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
இவர், கடந்த 12ம் தேதி மாலை, வீட்டிலிருந்து டியூசன் படிக்கும் மையத்திற்கு சென்றார். பின் வீடு திரும்பவில்லை. உறவினர், நண்பர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, இவரது தாய் கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பிரியாணி கடைக்காரரை தாக்கியவர் கைது மணவாள நகர்: திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் ஒண்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதாம்ஷா, 37. பிரியாணி கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை, ஆவடி காந்தி நகரை சேர்ந்த சரவணன், 32, என்பவர், பிரியாணி சாப்பிட்டு விட்டு, அதற்கான பணத்தை கொடுக்காமல், ஆதாம்ஷாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
ஆதாம்ஷா கொடுத்த புகாரின்படி வழக்கு பதிந்த மணவாள நகர் போலீசார், சரவணனை கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளைச் சிறையில் அடைத்தனர்.
மகள் மாயம்: தாய் புகார் ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அடுத்த, கல்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் பாஸ்கர். இவரது மகள் பிரியங்கா, 23. இவரது கணவர் ராஜேஷ். இவர்களுக்கு திருமணமாகி, 5 ஆண்டுகள் ஆகின்றன.
தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கணவரை விட்டு பெற்றோர் வீட்டில் வசித்து வந்த பிரியங்கா, நேற்று முன்தினம் முதல் காணவில்லை.
உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவரது தாய் மகாலட்சுமி கொடுத்த புகாரின்படி, பெரியபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
