தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/கிரைம் கார்னர்:திருவள்ளூர் மாவட்டம்

கிரைம் கார்னர்:திருவள்ளூர் மாவட்டம்

கிரைம் கார்னர்:திருவள்ளூர் மாவட்டம்


UPDATED : அக் 03, 2026 03:42 PM

ADDED : அக் 03, 2026 07:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 03:42 PM ADDED : அக் 03, 2026 07:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேடப்படும் குற்றவாளி

திருவள்ளூர்: மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு கலைஞர் நகரைச் சேர்ந்தவர் சரவணன், 45. இவர் மீது, திருவள்ளூர் இருப்புப்பாதை காவல் நிலையத்தில் திருட்டு, அடிதடி, அரிசி கடத்தல் உட்பட பல வழக்குகள் உள்ளன.

திருவள்ளூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்குகளில், ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள இவரை, தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுனில்வினோத் மோகன் நேற்று உத்தரவிட்டார்.

இதையடுத்து, திருவள்ளூர் இருப்புப்பாதை போலீசார், தனிப்படை அமைத்து சரவணனை தேடி வருகின்றனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை

திருத்தணி: திருத்தணி காவல் மாவட்டத்தை சேர்ந்த 4 வயது சிறுமியை, 11ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவன், ஆசை வார்த்தை கூறி, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

படுகாயம் அடைந்த சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமையை தாயிடம் கூறியுள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, திருத்தணி மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவாக உள்ள மாணவனை தேடி வருகின்றனர்.

6 சவரன் நகை திருட்டு

கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை, ரயில்வே ஸ்டேஷன் சாலையில் வசிப்பவர் ராஜா, 37. நேற்று முன்தினம், அவரது மனைவி, குழந்தைகளுடன் கோவிலுக்கு சென்றிருந்தார்.

அன்று இரவு, ராஜாவின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், இரு பீரோக்களை உடைத்து, 6 சவரன் நகை, 250 கிராம் வெள்ளி கொலுசு ஆகியவற்றை திருடி சென்றனர். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெண் துாக்கிட்டு தற்கொலை

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அடுத்த சூரராஜபட்டடையை சேர்ந்தவர் பரத்குமார், 32. இவரது மனைவி ஜெயப்பிரியா, 26. பரத்குமாருக்கு மது பழக்கம் உள்ளது. இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால், பரத்குமார் மீது பள்ளிப்பட்டு போலீசில், கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெயப்பிரியா புகார் அளித்திருந்தார். பின், இருவரும் சமரசம் செய்து, வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று ஜெயப்பிரியா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, ஜெயப்பரியாவின் சகோதரர் யுகந்தர், 28, கொடுத்த புகாரின்பரி, பள்ளிப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மயங்கி கிடந்த வாலிபர் உயிரிழப்பு

கடம்பத்துார்: கடம்பத்தூர் ஒன்றியம், சத்தரை கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே, கடந்த 30ம் தேதி ஆண் ஒருவர் மயங்கி கிடந்தார்.

கிராம நிர்வாக அலுவலர் தேவராஜ் கொடுத்த புகாரின்படி, 40 வயது மதிக்கத்தக்க அந்த நபரை மீட்ட மப்பேடு போலீசார், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

கிராம நிர்வாக அலுவலர் தேவராஜ் கொடுத்த புகாரின்படி, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us