/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் போட்டி
/
திருவள்ளூர் விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் போட்டி
ADDED : டிச 17, 2024 09:47 PM
திருவள்ளூர்:விவசாயிகளை ஊக்கவிக்க பயிர் விளைச்சல் போட்டி நடத்தப்பட உள்ளது.
திருவள்ளூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கலாதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
வேளாண் துறை சார்பில், விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட, மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டி நடத்தப்பட உள்ளது. போட்டியில் விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் பங்கு பெறலாம்.
சாகுபடி பரப்பு, 2 ஏக்கர் இருக்க வேண்டும். செம்மை நெல் சாகுபடி முறையிலும், பாரம்பரிய நெல் சாகுபடி முறையிலும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
திருவள்ளூர் மாவட்ட அளவில் கம்பு, கேழ்வரகு, உளுந்து, பச்சைப்பயறு, வேர்க்கடலை, எள் மற்றும் கரும்பு பயிர்களில் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன.
மாநில அளவில் நடத்தப்படும் பாரம்பரிய நெல் சாகுபடி பயிர் விளைச்சல் போட்டிக்கு பதிவு கட்டணம் 150 ரூபாய். போட்டிக்கான கடைசி தேதி மார்ச் 15, 2025. செம்மை நெல் சாகுபடி பயிர் விளைச்சலுக்கு கடைசி தேதி ஏப்.15.
மேலும், மாவட்ட அளவிலான நெல், பச்சை பயறு மற்றும் வேர்க்கடலை பயிர் விளைச்சல் போட்டிகளுக்கு பதிவு கட்டணம் 100 ரூபாய்.
வெற்றி பெறுவோருக்கு வேளாண் துறை சார்பில், பரிசு வழங்கப்படும். எனவே அனைத்து விவசாயிகளும் அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொர்பு கொண்டு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து போட்டியில் பங்கேற்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.