/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சக்தி பப்ளிக் பள்ளியில் கலாசார போட்டி பட்டம் விருப்பம் பட்டம் பெறும் பள்ளி

ADDED : டிச 12, 2025 06:35 AM

திருத்தணி:திருத்தணி அடுத்த முருக்கம்பட்டு பகுதியில் இயங்கி வரும் சக்தி பப்ளிக் பள்ளியில், கலாசார போட்டிகள் நடந்தன.
பள்ளி முதல்வர் யட்லா நாகலட்சுமி தலைமை வகித்தார். திருத்தணி இன்ஸ்பெக்டர் மதியரசன், போக்குவரத்து எஸ்.ஐ., கங்காதரன், கலாசரா சங்க தலைவர் அசோக்குமார்ஜி, ஒருங்கிணைப்பாளர் வந்தனாஜி பங்கேற்று துவக்கி வைத்தனர்.
போட்டியில், திருத்தணி, அரக்கோணம், சோளிங்கர், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் பள்ளிகளில் இருந்து, 350 மாணவ - மாணவியர் பங்கேற்று, நடனம், ஓவியம், பாட்டு, சொற்பொழிவு, பட்டிமன்றம் உட்பட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.
முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ - மாணவியர் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.