/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரவுடிகள் ஆட்டோவில் சாகசம் தட்டிக் கேட்டவருக்கு வெட்டு
/
ரவுடிகள் ஆட்டோவில் சாகசம் தட்டிக் கேட்டவருக்கு வெட்டு
ரவுடிகள் ஆட்டோவில் சாகசம் தட்டிக் கேட்டவருக்கு வெட்டு
ரவுடிகள் ஆட்டோவில் சாகசம் தட்டிக் கேட்டவருக்கு வெட்டு
ADDED : அக் 21, 2024 02:28 AM

மதுரவாயல்:மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பிரதான சாலையில் ஆட்டோவை ஓட்டி வந்த நபர்கள், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் வாகனங்களை இடிப்பது போன்றும், ஆபத்தான முறையில் ஓட்டிச் சென்றனர்.
மேலும் ஆலப்பாக்கம், சுண்ணாம்பு காலனி பகுதியில் சென்ற போது, போரூர் தர்மராஜன் கோவில் தெருவைச் சேர்ந்த கவுதம், 64, என்பவரை இடிப்பது போல் சென்றுள்ளனர்.
இதுகுறித்து தட்டிக் கேட்ட போது, ஆட்டோவில் இருந்து இறங்கிய இருவரும், கவுதமை சரமாரியாக தாக்கி, கத்தியால் வெட்டினர்.
காயமடைந்த கவுதமை அங்கிருந்தோர் மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்ற போது, மர்ம நபர்கள் ஆட்டோவை விட்டு விட்டு தப்பிச் சென்றனர்.
இதையடுத்து, ஆட்டோவை காவல் நிலையம் எடுத்துச் சென்று, பதிவு எண்ணை கொண்டு விசாரித்தனர்.
இதில், போதையில் ஆட்டோ ஓட்டி சம்பவத்தில் ஈடுபட்டது, பிரபல ரவுடிகளான மதுரவாயல் ஆண்டாள் நகரைச் சேர்ந்த ஆட்டோ கார்த்திக், 25, மற்றும் போரூர் காரம்பாக்கம் மூர்த்தி நகரைச் சேர்ந்த அஸ்வந்த், 27, என, தெரிந்தது.
இவர்கள் மீது, பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து, இருவரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.