/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
100 நாள் வேலைக்கு 'கட்டிங்' பணிதள பொறுப்பாளர் நீக்கம்
/
100 நாள் வேலைக்கு 'கட்டிங்' பணிதள பொறுப்பாளர் நீக்கம்
100 நாள் வேலைக்கு 'கட்டிங்' பணிதள பொறுப்பாளர் நீக்கம்
100 நாள் வேலைக்கு 'கட்டிங்' பணிதள பொறுப்பாளர் நீக்கம்
ADDED : ஜன 03, 2026 05:46 AM
திருத்தணி: நுாறு நாள் வேலைக்கு பணம் கேட்ட பணிதள பொறுப்பாளரை, துணை வ ட்டார வளர்ச்சி அலுவலர் அதிரடியாக நீக்கம் செய்தார்.
திருத்தணி ஒன்றியம் வேலஞ்சேரி ஊராட்சிக்கு உட் பட்ட கிராமங்களில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தில், கிராம மக்களுக்கு நுாறு நாள் வேலை வழங்குவதற்கு, 200 - - 500 ரூபாயை பணிதள பொறுப்பாளர் வசூலித்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் ஒன்றிய நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வந்தனர்.
இதனால், வெங்கடாபுரம் பகுதி நுாறு நாள் தொழிலாளர்கள், கலெக்டரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர், வெங்கடாபுரம் மக்களிடம் விசாரித்தனர்.
பணம் வசூலித்தது உண்மை என தெரிந்ததும், சம்பந்தப்பட்ட பெண் பணிதள பொறுப்பாளரை பணியிலிருந்து நீக்கினர்.

