/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஓரத்துாரில் பாலம் சேதம்: வாகன ஓட்டிகள் அச்சம்
/
ஓரத்துாரில் பாலம் சேதம்: வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : டிச 17, 2025 06:43 AM

திருவாலங்காடு: திருவாலங்காடு ----- பேரம்பாக்கம் மாநில நெடுஞ்சாலையில் ஓரத்தூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு, கொசஸ்தலையாற்று தண்ணீர் மணவூர் ஏரிக்கு செல்ல கால்வாய் உள்ளது. இதன் குறுக்கே மாநில நெடுஞ்சாலை உள்ளதால், 30 ஆண்டுகளுக்கு முன் பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் சில ஆண்டுகளாக சேதமடைந்து வருகிறது. இருபுறங்களிலும் தடுப்புச்சுவர் இடிந்து விழுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
மேலும், இச்சாலையின் வழியாக தினமும் ஏராளமான இருசக்கரம் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே, பாலத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியு றுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, கிராம மக்கள் கூறியதாவது:
பேரம்பாக்கம் ----- திருவாலங்காடு செல்லும் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. நீர்வரத்து கால்வாயின் மேல் கட்டப்பட்டுள்ள பாலம் சேதமடைய துவங்கிய போதே பராமரிப்பு பணிகளை மேற் கொள்ள நெடுஞ்சாலை மற்றும் பொதுப் பணித்துறைக்கு கோரிக்கை வைத்தோம்
ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பாலத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.

